கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக பெற்ற மகனையே கல்சுவரில் தூக்கி எறிந்தும், கடலில் வீசியும் கொலை செய்த கொடூர தாய். கணவன் மீது பழியை போட்டு, சிறைக்கு அனுப்புவதற்கும் மாஸ்டர் பிளான். வழக்கில் முக்கிய திருப்பமாக இருந்த பால் பாட்டில் மற்றும் தாயின் உப்பு படிந்த ஆடை. 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு. ஒன்றரை வயது மகனை கொன்ற கொடூர தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?நிதினுடன் நெருக்கமாக பேசிப் பழக ஆரம்பித்த சரண்யாகேரள மாநிலம், கண்ணூர் பக்கத்துல உள்ள தையில் பகுதியை சேந்தவங்கதான் சரண்யா. இவங்களுக்கும் பிரணவ்ங்குறவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னால கல்யாணமாகிருக்குது. இந்த தம்பதிக்கு வியான்ங்கற ஒரு ஆண் குழந்தையும் பிறந்துருக்குது. மகன் பிறந்த சில நாட்கள்லயே தம்பதிக்குள்ள அடிக்கடி சண்டை வந்துருக்குது. சமைக்கிறதுல ஆரம்பிச்சி சாதாரணமா பேசுறவரைக்கும் ரெண்டுபேருக்குமே சுத்தமா ஒத்துப்போகமா இருந்துருக்குது. அதனால, எந்நேரமும் எலியும், பூனையுமாவே இருந்துருக்காங்க. இதுக்குமத்தியில நண்பனை தேடி அவங்க வீட்டுக்கு அடிக்கடி வந்துபோன பிரணவோட நண்பன் நிதின், சண்டைய சமாதானம் பண்றேங்குற பேர்ல சரண்யாகிட்ட அடிக்கடி போன்லயும் பேசிருக்காரு. அப்போ, தன் கணவரை பத்தி வண்டி வண்டியா குறைசொன்ன மனைவி, அவரோட வாழவே புடிக்கல, ஆனா மகன் பிறந்துட்டானே, அதனால என்னோட வாழ்க்கையே போச்சுனு புலம்பிருக்காங்க. அதக்கேட்டு, ஆறுதல் சொன்ன நிதின் ஒருகட்டத்துல சரண்யாவோட நெருக்கமா பழகிருக்காரு. அந்த நெருக்கத்துல கணவன்மேல இருந்த வெறுப்பு சரண்யாவுக்கு மேலும் அதிகமாகிருக்குது. குழந்தை இல்லாவிட்டால் திருமணம் செய்வதாக கூறிய நிதின்குழந்தை மட்டும் இல்லனா நான் உன்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேனு சரண்யாவோட ஆசைய தூண்டிருக்காரு நிதின். அப்போ, உண்மையாதான் சொல்றயா? பிரணவ் இருக்காரே அப்றம் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்னு சரண்யா கேட்டப்ப, டைவர்ஸ் குடுக்குறது ஈசிதான், அவனும் நீ கேட்டா குடுத்துருவான்னு சொல்லிருக்காரு நிதின். இதையெல்லாம் கேட்டு கனவுல மிதந்த சரண்யா, தன்னோட குழந்தை மட்டும் இல்லனா பிரணவோட வாழ வேண்டிய எந்த கட்டாயமும் இல்ல, சுலபமா பிரிஞ்சிடலாம்னு நினைச்சி மகனை கொலை செய்ய முடிவெடுத்துருக்கா. அதுக்காக, அவ தேர்ந்தெடுத்த வழிதான் கடல். நைட் ரெண்டுமணிக்கு ஆழ்ந்து தூங்கிட்டு இருந்த குழந்தை வியானை நைசா தூக்கிட்டு கடற்கரைக்கு போய்ருக்கா சரண்யா. தாயோட தோள்ல தூங்கிட்டு இருந்த குழந்தை இரவுநேரத்துல வீசுன குளிர்ந்த காத்துல கண்முழிச்சி அழுதுருக்குது. அப்போ, கையோட கொண்டு வந்துருந்த பாட்டில்ல இருந்த பாலை குழந்தைக்கு குடுத்துருக்கா சரண்யா. மகனின் சிரிப்பை பார்த்து கூட மனமிறங்காத தாய் சரண்யாவயிறுமுட்ட பாலை குடிச்சதும், அழுகையை நிறுத்துன குழந்தை வியான் தாயை பார்த்து சிரிச்சிருக்கான். அந்த, சிரிப்ப பாத்துக்கூட சரண்யா, தான் எடுத்த முடிவுல இருந்து பின்வாங்கல. அதேமாதிரி, கொஞ்சநேரத்துக்கு முன்னால தன்னை தோள்ல போட்டு தூங்கவச்சி, பால் குடுத்த தாயே கொலை செய்யப்போறாங்கனு அந்த குழந்தைக்கும் தெரியல. முகம் நிறைய சிரிப்போட இருந்த மகனை தூக்கி, கடற்கரையோரம் இருந்த கல்லால ஆன சுவர்மேல எறிஞ்சிருக்கா சரண்யா. தலையில அடிபட்டு குழந்தை கதறி அழுதுருக்குது. அப்போ, மறுபடியும் குழந்தைய தூக்கி அதே சுவர்லயே எறிஞ்சிருக்கா. ஆனாலும், சரண்யா நினைச்சமாதிரி குழந்தையோட உயிர்போகல. அடுத்து, குழந்தைய தூக்கி கடல்ல வீசிட்டு விறுவிறுன்னு வீட்டுக்கு நடந்துபோய் தூங்கிட்டா சரண்யா. விடிஞ்சதும் குழந்தைய காணும், யாரு தூக்கிட்டுப்போனானு தெரியலையே அழுது நாடகமாடிருக்கா.விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்ட சரண்யாஅழுகை சத்தத்த கேட்டு ஒண்ணு கூடுன சொந்த பந்தங்கள் குழந்தையை தேடி அலைஞ்சிருக்காங்க. அப்பதான், குழந்தையோட சடலம் கரை ஒதுங்கி கிடந்துருக்குது. ஏற்கெனவே தம்பதிக்குள்ள இருந்த சண்டை விவகாரம் ரெண்டு தரப்பு உறவினர்களுக்குமே தெரியும்ங்குறதால மாறி மாறி குற்றம்சாட்டி இருக்காங்க. ஆனாலும், போலீசாரோட விசாரணையில சரண்யாவே தன் வாயால அத்தனை உண்மையும் சொல்லிட்டா. பிரணவ்தான் குழந்தைய கொலை செஞ்சி கடல்ல வீசிட்டதா வழக்கை திருப்பி, கணவனை சிறைக்கு அனுப்பிட்டு நிதின்கூட சேர்ந்து வாழ்க்கைய தொடங்க பிளான் போட்ருந்தா சரண்யா. ஆனா, அந்த பிளான் எல்லாம் மண்ணாப் போனதால போலீசார் கையில விலங்கு மாட்டி சிறையில அடைச்சிட்டாங்க. அடுத்த 9 நாட்கள்லயே அவளோட கள்ளக்காதலன் நிதினையும் கைது பண்ணிட்டாங்க போலீசார். இதுக்குமத்தியில விஷம் குடிச்சி தற்கொலைக்குகூட முயற்சி பண்ணா சரண்யா. கடந்த அஞ்சு வருஷமா இந்த கொலை வழக்கு கண்ணூர் தளி பரம்பு நீதிமன்றத்துல நடந்து இருந்துச்சு. தாய்க்கு ஆயுள் தண்டனைசரண்யாவின் உப்பு படிந்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், குழந்தையோட பால் பாட்டில் இதையெல்லாம் தடவியல் பரிசோதனைக்காக அனுப்பிருக்காங்க அதிகாரிகள். அதோட படுக்கை விரிப்புகளும், குழந்தையோட பால் பாட்டில் ஆய்வு முடிவுகளும் குற்றப்பத்திரிகையில சேர்க்கப்பட்டுச்சு. அதேமாதிரி, கடைசியா குழந்தை அணிஞ்சிருந்த ஆடைகளையும் ஆய்வு பண்ணிருந்தாங்க தடவியல் துறையினர். அதுமட்டுமில்லாம கடற்கரையோரம் இருந்த கல்சுவர்லயும் சரண்யாவோட கால்தடம் பதிவாகி இருந்துச்சு. அத்தனையையும் முக்கிய ஆதாரமா வழக்குல எடுத்துருக்காங்க. இந்த ஆதாரங்களை வச்சி விசாரணை நடத்துன நீதிமன்றம், கள்ளக்காதலுக்காக பெத்த மகனையே கல்சுவத்துல தூக்கி வீசியும், கடல்ல தூக்கி போட்டும் கொலை செஞ்ச சரண்யாதான் குற்றவாளினு தீர்ப்பு வழங்குனதோட அவளுக்கு ஆயுள் தண்டனை விதிச்சும் உத்தரவிட்ருக்குது. ஆனா, கள்ளக்காதலன் நிதின் வழக்குல இருந்து விடுவிக்கப்பட்ருக்காரு. Related Link பிரியாணியில் தூக்க மாத்திரை மிக்சிங்