கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மருமகள். வியாபாரத்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாமியாருக்கு ஷாக். வீட்டில் தனியாக இருந்த ஆசிரியையின் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொன்றது யார்? கொலையாளி சிக்கினானா? நடந்தது என்ன?வீடு திரும்பிய மாமியாருக்கு காத்திருந்த அதிர்ச்சி காலங்காத்தாலேயே வியாபாரத்துக்கு போன மாமியார், மதியம் ஒரு மணிக்கு மேல தான் வீட்டுக்கு வந்திருக்காங்க. விடியக்காலையிலேயே கடைக்கு போய்ட்டு ரொம்ப பசியோட வீட்டுக்கு வந்தவங்க, வாசல்ல காலடி எடுத்து வச்சதுமே சோனி சோனின்னு மருமகளோட பேர சொல்லிக்கிட்டே தான் உள்ள போயிருக்காங்க. ரொம்ப பசிக்குதும்மா, சாப்பாடு எடுத்து வைன்னு கத்தி சவுண்டு விட்டும், சோனிகிட்ட இருந்து எந்த பதிலுமே வரல. என்னடா சத்தத்தையே காணும், எங்க போய்ட்டான்னு தேடுன மாமியார், நேரா கிச்சன் உள்ள போய் பாத்துருக்காங்க. அங்க கழுத்தறுக்கப்பட்ட நிலையில மருமகள் சோனி இறந்து கிடந்தத பாத்து, அவங்களுக்கு ஒரு நிமிஷம் மூச்சே நின்னு போயிருச்சு. உடனே பக்கத்து வீட்டுக்காரங்களையும், சொந்தக்காரங்களையும் கூப்ட்டு விஷயத்த சொல்லியிருக்காங்க. அடுத்து கொஞ்ச நேரத்துலேயே போலீஸும் ஸ்பாட்டுக்கு வந்திருக்காங்க. கொடூரமா கிடந்த சோனியின் சடலத்த கைப்பத்தி, போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து, என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க. உமாசங்கர் வீட்டில் இல்லாததால் வலுத்த சந்தேகம்உத்தரபிரதேச மாநிலம் மதர்பாரி கிராமத்துல இருக்குற அந்த வீட்டுல சோனி தன்னோட கணவர் உமாசங்கர், மாமனார், மாமியார்கூட வாழ்ந்துட்டு இருந்தாங்க. மாமனாரும், மாமியாரும் காலாங்காத்தாலேயே வியாபாரத்துக்கு போயிட்டாங்க. அதனால வீட்டுல கணவனும், மனைவியும் மட்டும்தான் இருந்துருக்காங்க. இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட போலீஸோட சந்தேகப்பார்வை, கணவன் உமாசங்கர் பக்கம் திரும்புச்சு. மனைவி கூட ஏற்பட்ட சண்டையில, கணவன் தான் சோனி கழுத்த அறுத்து கொலை பண்ணிருப்பாரோங்குற சந்தேகம் எழவே விசாரணைய தொடங்குனாங்க. அப்போ, உமாசங்கர் வீட்டுல இல்ல. மனைவி சோனி மீது உமாசங்கருக்கு ஏற்பட்ட சந்தேகம்ஏற்கெனவே அவரு மேல போலீஸுக்கு டவுட் இருந்த நிலையில, உமாசங்கர் காணாமப்போனது அவரு மேல இருந்த சந்தேகம் அதிகமாகிருக்கு. அடுத்தது, அவர பிடிச்சு விசாரிச்சப்பதான், சோனிக்கு என்ன நடந்துச்சு-ங்குறது தெரியவந்துச்சு. பாஜக நிர்வாகியா இருக்குற உமாசங்கர், அடிக்கடி கட்சி சம்பந்தமா வெளியூருக்கு போய்ருவாராம். வெளியூர் போய்ட்டு வந்ததுமே, நான் வெளியூர் போற நேரம் நீ வேற யார்கிட்டயோ பேசி பழகிட்டு இருக்கன்னு சொல்லி மனைவிக்கிட்ட சண்ட போடுவாராம். அதே கிராமத்துல உள்ள தனியார் பள்ளியில டீச்சரா வேலை பாத்துட்டு இருந்த சோனி, ஸ்கூல்ல இருந்து எப்பயாவது லேட்டா வந்தாலும் சரமாரியா தாக்கி சித்ரவதை பண்ணிருக்கான்.சோனியை சமாதானம் செய்து அழைத்து வந்த மாமியார்கடந்த சில மாசமாவே சோனிக்கும், உமாசங்கருக்கும் இடையில தகராறு நடந்துட்டு இருந்ததா சொல்லப்படுது. மனைவியோட நடத்தையில சந்தேகப்பட்டு அவங்கள அடிச்சு உதைச்சு கொடுமைப்படுத்திருக்காரு. அதனால, கடந்த ஒரு மாசத்துக்கு முன்னாடி கூட, சோனி, கோவச்சிக்கிட்டு தன்னோட அம்மா வீட்டுக்கு போய்ருக்காங்க. ரெண்டு மூணு நாளைக்கு அப்புறம், உமாசங்கரோட பெற்றோர் தான் மருமகள சமாதானப்படுத்தி திரும்ப தன்னோட வீட்டுக்கு கூப்டு வந்துருக்காங்க.உமாசங்கரை கைது செய்து காவல்துறையினர் விசாரணைஇப்படியே சண்டையும் சச்சரவுமா போய்ட்டு இருந்த நிலையில, சம்பவத்தன்னைக்கு காலையிலயும் மனைவி சோனியோட நடத்தையில சந்தேகப்பட்டு உமாசங்கர் சண்ட போட்டுருக்காரு. அப்போ சோனி ஒண்ணு சொல்ல, உமாசங்கர் ஒண்ணு சொல்லன்னு ரெண்டு பேருக்கும் நடுவுல பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அப்போ, திடீர்னு ஆவேசமடைஞ்ச உமாசங்கர், வீட்டுல இருந்த கத்திய எடுத்து, மனைவியோட கழுத்த அறுத்து கொன்னுட்டு அங்க இருந்து தப்பிச்சு போயிருக்கான். விசாரணையில, கணவன் உமாசங்கர் தான் கொலையாளிங்குறத கண்டுபிடிச்ச போலீஸ், அவன அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல தள்ளிட்டாங்க. மனைவி மேல ஏற்பட்ட சந்தேகத்தால, ஒரு குடும்பமே சிதஞ்சு சின்னாபின்னமாகிருச்சு. இதையும் பாருங்கள் - சிசிடிவியால் வெளியான பகீர் உண்மை