கணவனை காணவில்லை என பதற்றத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி. நடுரோட்டில் கணவன் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு செல்போனை ஆய்வு செய்த போலீஸ். விசாரணையில் வசமாக சிக்கிய மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை. கணவனை கொலை செய்யும் அளவுக்கு அப்படி என்ன ஆத்திரம்? கொடூர கொலையின் பின்னணி என்ன?கணவனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்ஜனவரி 15ம் தேதி. சோடவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பெண் ஒருத்தங்க, வேலை விஷயமா வீட்ட விட்டு வெளியில போன கணவர் சின்னா, இப்ப வர வீட்டுக்கு வரல, அவருக்கு என்னாச்சு தெரியல, நீங்க தான் கண்டுபிடிச்சு தரனும்ன்னு புகார் அளிச்சுருக்காங்க. இதகேட்ட உடனே அந்த புகார வாங்குன போலீசார் சின்னாவ பல இடங்கள்ல தேடிருக்காங்க. இதுக்கிடையில போலீஸ்க்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன ஒருத்தரு, சார் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில சின்னா, விபத்துல சிக்கி உயிரிழந்து கிடக்குறான்னு சொல்லிருக்காங்க. இதகேட்டு சம்பவ இடத்துக்கு போன போலீஸ் சின்னாவோட சடலத்த பாத்துருக்காங்க. அப்ப அவரோட தலையில அதிக ரத்தக் காயங்கள இருந்துருக்கு, ஆனா உடம்புல ஒரு காயம் கூட ஏற்படல. இதபாத்து சந்தேகமடைந்த போலீஸ், இத சந்தேக வழக்கா பதிவு பண்ணி விசாரிச்சுருக்காங்க. கணவன் உயிரிழந்த விஷயத்த கேட்டு அங்க வந்த மனைவி கொண்டம்மா, எந்த ஒரு சோகமும் இல்லாம நின்னுருக்காங்க.மனைவி கொண்டம்மாவின் நடவடிக்கையில் சந்தேகம்இதனால கொண்டம்மா மேல போலீஸ்க்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கு. இந்த வழக்கு விசாரணைய கொண்டம்மா கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணிருக்காங்க போலீஸ். முதல்ல அவங்களோட செல்போன எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல கொண்டம்மா, கணேஷ்-ங்குற நபர் கூட அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்துருக்கு. அதுக்கப்புறம் தெனாலி பகுதியில பதுங்கியிருந்த கணேஷையும் செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணி பிடிச்ச போலீஸ் ரெண்டு பேரையும் கஸ்டடியில எடுத்து எல்லா உண்மைகளையும் வெளியில கொண்டு வந்துருக்காங்க. கொஞ்சிக் குலாவி பேசியிருந்த மெசேஜ்ஆந்திராவுல உள்ள துர்வோலு கிராமத்த சேந்த டேகல சின்னாவுக்கும் - கொண்டம்மாவுக்கும் 15 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு 12 வயசுல ஒரு மகன் இருக்கான். கணவன் மனைவி ரெண்டு பேரும் விவசாயம் பாத்துக்கிட்டு இருந்துருக்காங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெனாலி பகுதிக்கு போன ரெண்டு பேரும் அங்கையே ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து கூலி வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. அப்ப கொண்டமாவுக்கும் அங்க மேஸ்திரியா இருந்த கணேஷ்க்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. கணவன் வேலைக்கு போனதுக்கு அப்புறம் அடிக்கடி கணேஷ வீட்டுக்கு கூப்டுற கொண்டம்மா அவங்க கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க. அதே மாதிரி எந்த ஒரு வேலைக்கும் போகாம வீட்ல இருந்த கொண்டம்மா கிட்ட நிறைய பணம் இருந்துருக்கு. இதபாத்து சந்தேகப்பட்ட சின்னா, நீ எந்த ஒரு வேலைக்கும் போகல, ஆனா எப்படி இவ்ளோ பணம் உன்கிட்ட இருக்குதுன்னு கேட்ருக்காரு. அதுக்கு கொண்டம்மா ஏதேதோ சொல்லி மழுப்பிருக்காங்க. அதுக்கப்புறம் கொண்டம்மாவோட செல்போன எடுத்து பாத்துருக்காரு. அப்ப அவங்க கணேஷ் கூட கொஞ்சுக் குழாவி பேசியிருந்த மெஸேஜ்கள் இருந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச சின்னா, மனைவிய கூப்டுட்டு சொந்த ஊருக்கே வந்துட்டாரு.கணேஷ், சிவக்குமார், கொண்டம்மா ஆகிய 3 பேர் கைதுஇங்க வந்து, கொஞ்ச நாட்கள் மட்டும் கணேஷ் கூட பேசாம இருந்த கொண்டம்மா, அதுக்கப்புறம் மறுபடியும் அவரு கூட பேச ஆரம்பிச்சுட்டாங்க. இத தெரிஞ்சுக்கிட்ட கணவன், கொண்டம்மமாவ போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. இதனால கொலை வெறியான கொண்டம்மா, சின்னா உயிரோட இருக்குற வர்ற கணேஷ் கூட பேச முடியாது, அவன கொன்னா தான் கணேஷ் கூட நிம்மதிய இருக்க முடியும்ன்னு நினைச்சு அவர கொலை பண்ண திட்டத்த போட்ருக்காங்க. இதுக்கு கணேஷூம் ஓகே சொல்ல, இந்த கொலை திட்டத்துல நண்பர் சிவக்குமாரையும் கூட சேத்துக்கிட்டாரு கணேஷ். சம்பவத்தன்னைக்கு சின்னா பைக்ல போய்ட்டு இருந்தாரு. அப்ப ஊருக்கு ஒதுக்குப்புறமா உள்ள ஒரு இடத்துல மறைஞ்சுருந்த கணேஷ் மற்றும் அவரோட நண்பர் சிவக்குமார், சின்னாவ வழிமறிச்சு பயங்கரமா தாக்கிருக்காங்க. அடுத்து சின்னாவோட தலைய அங்குள்ள ஒரு வேப்பமரத்துல முட்டி கொடூரமா துடிதுடிக்க கொன்னுட்டு ஆக்ஸிடன்ட் மாதிரி செட்டப் பண்ணிட்டு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா மனைவியோட நடவடிக்கைய வச்சு எல்லா உண்மையையும் கண்டுபிடிச்ச போலீஸ் கணேஷ், சிவக்குமார், கொண்டம்மாவ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.இதையும் பாருங்கள் - கூலிப்படைக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து ஸ்கெட்ச்