பீகார்... வீட்டில் இருந்து வெளியே போன இளைஞர் சடலமாக மீட்பு. இளைஞரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கும்பல். பிளாஸ்டிக் கவரில் இருந்த உடல் பாகங்கள். கங்கை ஆற்றில் வீசப்பட்ட தலை மற்றும் கால்கள். மூணு பேரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். காணாமல் போன இளைஞர் யார்? இவர்களுக்கிடையே என்ன பிரச்னை? நடந்தது என்ன?23ம் தேதி. வீட்ட விட்டு வெளியில போன அபிஷேக் நைட்டு ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு திரும்பல. அவர் எங்க இருக்கான்னு தெரிஞ்சுக்க பெற்றோர், அவருக்கு ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. அப்ப ஃபுல் ரிங் போய்ருக்கு, ஆனா ஃபோன எடுக்கல. அதுக்கடுத்து மறுநாள் காலையில மறுபடியும் ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. அப்ப ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. இதனால பதற்றமடைஞ்ச பெற்றோர், உடனே பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷன்ல தன்னோட மகன காணும்ன்னு புகார் அளிச்சுருக்காங்க. போலீசாரும் பல இடங்கள்ல தேடி அலைஞ்சாங்க. அந்த ஏரியாவுல உள்ள சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணாங்க. ஆனா எங்க தேடியும் கண்டுபிடிக்க முடியல. அதுக்கடுத்து செல்போன் நம்பர கைப்பற்றுன போலீஸ், அவருக்கு யார் கிட்ட இருந்து அடிக்கடி ஃபோன் கால் வந்துருக்கு, யார் கிட்ட இருந்து லாஸ்ட் கால் வந்துருக்குன்னு பாத்துருக்காங்க.அதுல ராதே-ங்குற நபரோட நம்பர் காட்டிருக்கு. அபிஷேக், நண்பர் ராதே வீட்ல இருப்பாரான்னு நினைச்சு போலீஸ் அங்க போய்ருக்காங்க. அப்ப போலீஸ பாத்த உடனே ராதேவும், அவரு கூட இருந்த ரித்திக், மற்றொரு இளைஞரும் வீட்ல இருந்து தெறிச்சு ஓடிருக்காங்க. இதனால அவங்கள சுத்தி வளைச்சு பிடிச்ச போலீஸ், எதுக்கு எங்கள பாத்து பயந்து ஓடுறிங்க, அபிஷேக்கிற்கு நீங்க தான் லாஸ்ட்டா ஃபோன் பண்ணிருக்கிங்க, அவன் எங்க இருக்கான்னு சொல்லுங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு ராதே திருதிருன்னு முழிச்சுட்டு ஒன்னுமே சொல்லாம அமைதியா இருந்துருக்காரு. இதனால அவரு மேல சந்தேமடைஞ்ச போலீஸ், அவர கஸ்டடியில எடுத்து தங்களோட பாணியில விசாரிச்சாங்க. அதுல பல உண்மைகள கொட்டீத் தீர்த்துருக்காரு. அபிஷேக்க வெட்டிக் கொலை செஞ்சுட்டதாவும், அவரோட சடலத்த துண்டு துண்டா வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு மண்ணுக்கு அடியில புதைச்சு வச்சுருக்குறதா சொல்லிருக்காங்க.இந்த தகவல வச்சு போலீசார் உடனே ரகோபூர் பகுதிக்கு போய்ருக்காங்க. ராதே அடையாளம் காட்டுன இடத்த தோண்டுன போலீஸ், மண்ணோட நிரம்பியிருந்த பைய எடுத்து பாத்துருக்காங்க. அதுல அபிஷேக்கோட வயிறு, கை, தொடைப் பகுதியெல்லாம் வெட்டப்பட்டு இருந்துருக்கு. ஆனா தலை மற்றும் கால்கள மட்டும் காணல. அதுக்கடுத்து தலை மற்றும் கால்கள எங்கன்னு கேட்ருக்காங்க. அதுக்கு ராதே, யார் கிட்டயும் சிக்கிரக்கூடாதுன்னு அவரோட தலை, கால்களை கங்கை ஆத்துல வீசிட்டோம்ன்னு சொல்லி பெரிய குண்ட தூக்கி போட்ருக்காங்க.பீகார், நாத்நகர் பகுதிய சேந்த அபிஷேக், ராதே, ரித்திக்ன்னு எல்லாருமே க்ளோஸ் ப்ரண்ட்ஸ். இவங்களுக்குள்ள அப்பப்ப சில மோதல்கள் ஏற்பட்டாலும், கொஞ்சம் நேரத்துலையே எல்லாரும் ஒன்னு சேந்துருவாங்களாம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ராதேவோட ஃபோன் உடைஞ்சு போய்ருக்கு.அப்ப அபிஷேக், என்னோட நண்பன் ஒருத்தன் செல்போன் கடை வச்சுருக்கான், அவன் கிட்ட லேட்டஸ்ட் மாடல் மொபைல் நிறைய இருக்குன்னு சொல்லிருக்காரு. அதுக்கடுத்து ராதேவை, அந்த கடைக்கு கூப்டு போன அபிஷேக் தவணை முறையில 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஃபோன் வாங்கி கொடுத்துருக்காரு. புதுஃபோன் வாங்குன ராதே, கொஞ்சம் மாசம் மட்டும் தவணை பணத்த கரைக்ட்டா கட்டிருக்காரு. அதுக்கப்புறம் பணத்த கட்டவேயில்லை. இதனால அபிஷேக்குக்கு ஃபோன் பண்ண கடைக்காரர், உன் நண்பன் தவணை பணத்த கட்டவே இல்ல, மூணு நாள் தான் உனக்கு டைம், பேலன்ஸ் பணம் எனக்கு வரனும், அப்படி இல்லன்னா உன்ன சும்மா விடமாட்டேன்னு மிரட்டிருக்காரு. இதகேட்டு கோபமான அபிஷேக் நண்பர் ராதேவுக்கு ஃபோன் பண்ணி, செல்போன் வாங்கி கொடுத்தா, உன்னால தவணை பணத்த கட்ட முடியாதான்னு அவர தகாத வார்த்தையால திட்டிருக்காரு.இதனால ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டிக்கிட்டாங்க. இப்படி ஆரம்பிச்ச பிரச்னை தான் கொலையில முடிஞ்சுருக்கு. மதுபோதையில நடந்தத தன்னோட நண்பர் ரித்திக் கிட்டயும் இன்னொரு நண்பர் கிட்டயும் சொன்ன ராதே, அவங்களோட சேந்து அபிஷேக்க கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. 23ம் தேதி நைட்டு அபிஷேக்க ஃபோன் பண்ணி தனியா கூப்ட ராதே தன்னோட நண்பர்ளோட சேந்து, அவர ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூப்டு போய்ருக்காரு. அங்க வச்சு அபிஷேக்கோட காலுலையே துப்பாக்கியால சுட்டுருக்காரு ராதே. அடுத்து அவர வெட்டிக் கொலை செஞ்ச மூணு பேரும், சடலத்த துண்டு துண்டா வெட்டி, கை, வயிறு, தொடை பாகங்கள மட்டும் ஒரு பிளாஸ்டிக் பையில போட்டு புதைச்சுட்டாங்க. தலை மற்றும் கால்கள துண்டா வெட்டி கங்கை ஆற்றுல வீசிட்டாங்க. இந்த வழக்க தீர விசாரிச்ச போலீஸ், ராதே, ரித்திக் உள்ளிட்டோர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.