நெல்லை சந்திப்பு ரயில் நிலைய சாலையில் உள்ள சென்ட்ரல் கபே உணவகத்தில் பெண்ணிடம் தவறான செய்கை காட்டியதாக ஊழியரை பெண்ணின் உறவினர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.தூத்துக்குடியை சேர்ந்த குடும்பத்தினர் உணவு வாங்க வந்தபோது, பெண்ணிடம் பில் போடும் ஊழியர் தவறான செய்கை காட்டியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அப் பெண்ணின் உறவினர்கள் கேட்டபோது தகராறு ஏற்பட்டு ஊழியரை தாக்கினர். இரு தரப்பினரையும் விலக்கி விட்ட போலீசார் இருதரப்பு கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.