ஈராக்கில் எண்ணெய் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தெற்கு பாஸ்ராவில் உள்ள ருமைலா எண்ணெய் கிடங்கில் உள்ள ஐந்தாவது யூனிட்டில், எண்ணெய் சேமிப்பு தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறினர். தீ விபத்து காரணமாக வானுயர கரும்புகை எழும்பியது.