ஒரு காலத்தில் குடும்ப அரசியலுக்கு எதிராக, முறுக்கு மீசையுடன் டிவியை சுக்குநூறாக உடைத்து சூட்டிங் எடுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இன்று குடும்ப அரசியல் தான் நாட்டுக்கே தேவை என வலிய வந்து விளக்கம் கொடுத்திருப்பது கந்தர்வக்கோட்டை சமஸ்தானத்தையே அதிர வைத்துள்ளது. அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் வருவது சகஜம் தான் என்றாலும், ஆண்டவர் அளவுக்கு அநியாயத்திற்கு பல்டி அடிக்க கூடாது என்பதே பாடமாக உள்ளது. குடும்ப அரசியல், விளக்கம்திமுக மீதான குடும்ப அரசியல் விமர்சனத்திற்கு, கூட்டணிக் கட்சியில் இருக்கும் கமல்ஹாசன் கொடுத்த விளக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், அதே குடும்ப அரசியல் குறித்து கடந்த காலங்களில் என்னென்னவெல்லாம் பேசினார் என்பதையும் தோண்டி பார்க்க வேண்டும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனக்கே உரிய பாணியில் ஏற்ற இறக்கத்துடன் தமிழ் புலமையில் உரையாற்றினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேசிய அரசியலில் களம் காண வைக்கப் போகிறோம் என்ற கமல்ஹாசன், நாட்டின் நலன் கருதி தான் திமுக கூட்டணியில் இணைந்ததாக விளக்கம் கொடுத்தார். பேசிக் கொண்டிருக்கும் போதே தனது காந்தக் குரல் TONEல் பேச தொடங்கிய கமல், மக்களை குடும்பமாக நினைக்கும் தலைவர்கள் எல்லாரும் குடும்ப அரசியல் தான் செய்கிறார்கள், இனிமேலும் அது தொடர வேண்டும் எனக் கூறினார். பழைய வீடியோக்களை பார்க்கும் போது...இதே கமல்ஹாசன் 2018ல் கட்சி தொடங்கி 2019 மக்களவை தேர்தலில் களம் காணும் போது, குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழி தோண்டி புதைத்தவர்கள் என திமுகவை திட்டியிருந்தார். ஆனால், அதே வாயிலேயே குடும்ப அரசியல் என்பது மக்களை குடும்பமாக நினைப்பது தான் என புது விளக்கம் கொடுத்து கண்டெண்ட் ஆகியிருக்கிறார். கட்சி தொடங்கும் போது எதையெல்லாம் கமல்ஹாசன் எதிர்த்து பேசினாரோ, தற்போது அதையெல்லாம் ஆதரித்து பேசும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறார். அரசியலை பொருத்தவரையில் ஆதரவு, எதிர்ப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் மாறும். ஆனால், திமுக கூட்டணியில் இணைந்ததில் இருந்தே கமல்ஹாசன் மாறியது தான் எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சியாக திமுகவுக்கு புகழ் பாடுவது கமலுக்கு கை வந்த கலையாக இருந்தாலும், கமல் பேசிய பழைய வீடியோக்களை பார்க்கும்மக்களுக்கு தான் நெருடலை கொடுக்கிறது.சமூக வலைதளங்களில் விமர்சனம் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் முக்கியமான விமர்சனம் தான் வாரிசு அரசியல், குடும்ப அரசியல். அதாவது, திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் தான் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் எனவும், இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்தவர்கள் மட்டுமே பதவிக்கு வருவதால் அதிகார பரவல் இருக்காது என்பது தான் எதிர்க்கட்சிகள் முன் வைக்கும் விமர்சனம். இப்படி இருக்கையில், தன்னை முற்போக்குவாதியாக காட்டிக் கொள்ளும் கமல்ஹாசன், குடும்ப அரசியலுக்கு கொடுத்த விளக்கம் தான் விநோதத்திலும் விநோதம். திமுக கூட்டணியில் 2019 தேர்தலில் இருந்து பயணித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை OVER TAKE செய்யும் அளவுக்கு வாரிசு அரசியலுக்கும், குடும்ப அரசியலுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார் கமல்ஹாசன். திமுகவின் கூட்டணி தயவால் ராஜ்ய சபா எம்.பி., ஆகியிருக்கும் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலிலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு என தகவல் கசிந்துள்ளது. இந்த சமயத்தில், குடும்ப அரசியலுக்கு ஆதரவாக கமல் கொடுத்திருக்கும் விளக்கத்தை கூட்டிக் கழித்து பார்க்கும் போது, மக்கள் நீதி மய்யமா? மீதி மய்யமா? என்ற கேள்வி எழுவதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. Related Link வேகம் காட்டும் திமுக தொகுதி பங்கீட்டு குழு