அமெரிக்காவில் 2 பேருடன் சென்ற சிறிய விமானம், பிலடெல்பியாவில் ((Philadelphia))உள்ள ஷாப்பிங் மால் அருகே கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானத்தில் சென்ற 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் பலர் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் வானில் பறந்த சிறிய விமான திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.