சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா கர்வ் காரில் உறுதி மற்றும் இழுவிசை தன்மையை நிரூபிக்கும் வகையில், டாடா நிறுவனம் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது.125 ஹெச்பி மற்றும் 225 என்எம் ஆற்றலை வெளிப்படுத்தும் என டாடா விளம்பரப்படுத்தியிருந்த நிலையில், அதனை நிரூபிக்கும் வகையில் மொத்தம் 42 ஆயிரம் கிலோ எடை கொண்ட 3 ட்ரக்குகளை, டாடா கர்வ் கார் அசால்ட்டாக இழுத்துச் சென்றது.