ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என்று நினைப்பது தான் மன்னர் பரம்பரை மனநிலை என விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சியில் பொறுப்பு கிடைக்கும் போது இருந்த மனநிலையில் தான் தற்போதும் இருப்பதாகவும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று தொடர்ந்து முழங்குவதே நேர்மையான அரசியல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.