ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், ஐதராபாத் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி பெற்றது. நேற்று தமிழ்நாடு டிராகன்ஸ்- ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதிய ஆட்டம், 2க்கு 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்ட நிலையில், 4க்கு 3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி பெற்றது.