மருத்துவமனைக்கு பின்புற வழியாக நடந்து சென்ற பொதுமக்கள். ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை கண்டு அதிர்ச்சி. கிராம மக்களிடம் உளறிய இளைஞரை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போலீஸ். காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம். இளம்பெண் கொலை செய்யப்பட்டது எப்படி? பின்னணி என்ன?ஜகீர் என்பவரை பிடித்து விசாரணை செய்த போலீஸ் இரகடா பகுதியில உள்ள மருத்துவமனை பின்பக்கம் வழியா பொதுமக்கள் நடந்து போய்ட்டு இருந்தாங்க. அப்ப ரத்த வெள்ளத்துல இளம்பெண் ஒருத்தங்களோட சடலம் கிடந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச மக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. இதுக்கிடையில போரபண்டா பகுதியில இருந்து போலீஸ்க்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன ஒருத்தரு, சார் ஜகீர்-ங்குற நபர், ஒரு கொலை பண்ணிட்டதா அவனே கிராம மக்கள் கிட்ட சொல்லிட்டு இருக்கான்னு தகவல் தெரிவிச்சுருக்காங்க. இதவச்சு நேரா போரபண்டா பகுதிக்கு போன போலீஸ் ஜகீர்ர கிட்ட விசாரிச்சுருக்காங்க..ஜகீர் - பாத்திமா இடையே தகாத உறவுதெலங்கானா போரபண்டா பகுதிய சேந்த ஜகீர் ஜூஸ் கடை நடத்திட்டு இருக்காரு. மதுபோதைக்கு அடிமையாகி கிடந்த ஜகீர் அடிக்கடி போரபண்டா பகுதியில உள்ள பப்புக்கு போகுறத வழக்கமா வச்சுருந்துருக்காரு. அப்ப அந்த பப்புல டான்சரா இருந்த பாத்திமா-ங்குற பெண் கூட இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கு. பாத்திமாவுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்கன்னு கூறப்படுது. ஆனா அதையெல்லாம் மறந்த பாத்திமா, ஜகீர் கூட நெருங்கி பழக ஆரம்பிச்சுருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள கள்ளக்காதலா மாறிருக்கு. கணவனுக்கு தெரியாம பாத்திமா, ஜகீர் கூட ஊர் சுத்திக்கிட்டு அடிக்கடி தனிமையிலையும் இருந்துருக்காங்க. இதுக்கிடையில பாத்திமா வேற ஒரு பப்புக்கு மாறிட்டாங்க.மீண்டும் காதலிக்கும்படி கெஞ்சிய இளைஞர் ஜகீர்இது ஜகீர்க்கு சுத்தமா பிடிக்கல. இந்நிலையில வேற இடத்துக்கு வேலைக்கு போன பாத்திமாவுக்கு மற்றொரு இளைஞர் கூட பழக்கமாகிருக்கு. இதனால பாத்திமா ஜகீர் கூட பேசுறதையும் கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுருக்காங்க. இதனால கடும் கோபமான ஜகீர் எதுக்கு முன்ன மாதிரி என்கூட பேசமாட்டேங்குற, உனக்கு என்ன ஆச்சு, நம்ம லவ் மேட்டர் உன்னோட கணவனுக்கு தெரிஞ்சுருச்சான்னு கேட்ருக்காரு. அதுக்கு பாத்திமா, அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல, உன்னைய எனக்கு சுத்தமா பிடிக்கல, நான் வேற ஒருத்தன காதலிக்குறேன்னு சொல்லிருக்காங்க. இதகேட்டு அதிர்ச்சியடைஞ்ச ஜகீர், நான் உன்ன உயிருக்கு உயிரா லவ் பண்றேன், உன்னை நல்லபடியா வச்சு பாத்துப்பேன்னு சொல்லி கெஞ்சிருக்காரு. ஆனா அத காதுல வாங்காத பாத்திமா, ஜகீர திட்டிருக்காங்க.ஜகீரை கைது செய்து விசாரித்து வரும் போலீஸ்இதனால அந்த கோபத்தோடயே வீட்டுக்கு போன ஜகீர், பாத்திமாவ கொலை பண்ண திட்டம் போட்ருக்கான். சம்பவத்தன்னைக்கு பாத்திமாவுக்கு ஃபோன் பண்ண ஜகீர், உன் கிட்ட லாஸ்ட்டா கொஞ்சம் பேசனும், அதுக்கப்புறம் உன்னைய எப்பவுமே டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லி ப்ரையின் வாஷ் பண்ணிருக்கான். அத நம்பி பாத்திமாவும் ஜகீர் கூட பைக்ல போய்ருக்காங்க. அப்ப பாத்திமாவ ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூப்டுட்டு போன ஜகீர், அங்க வச்சு வாக்குவாதம் பண்ணிருக்கான். அடுத்து பாத்திமாவ கீழ தள்ளி விட்டு சரமாரியா தாக்குன ஜகீர், கீழ கிடந்த கல்ல வச்சு அவங்கள முகத்துலையே சரமாரியா தாக்கி கொன்னுருக்கான். அடுத்து அங்கருந்து தப்பிச்சு போன ஜகீர், கிராம மக்கள் கிட்ட நான் என்னோட காதலிய கொலை பண்ணிட்டேனு சொல்லிருக்கான். அதவச்சு ஜகீர் அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்காங்க. இதையும் பாருங்கள் - போராட்டக்காரர்களை ஊக்குவிக்கும் டிரம்ப்