ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் டயர்வெடித்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அவரது கார் பந்தய டிராக்கில் இருந்து கிரேன் மூலம் அகற்றப்பட்டது. நல் வாய்ப்பாக அஜித்துக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக அஜித் சர்வதேச கார் பந்தயங்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.