அடுத்த ஆண்டு நடைபெறும் கார் பந்தயத்திற்கு தயாராகும் விதமாக, துபாயில் போர்ச் GT3 காரை ஓட்டி நடிகர் அஜித் பயிற்சி மேற்கொண்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துபாயில் நடைபெற உள்ள GT3 கோப்பைக்கான கார் ரேஸில் அஜித் பங்கேற்கும் நிலையில், ஆட்டோட்ரோம் சர்க்யூட்டில் அஜித் தலைமையிலான அணி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.