புஷ்பா 2 திரைப்படத்தில் காவல்துறையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி நடிகர் அல்லு அர்ஜூன் மீது காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் தயாரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடிப்பள்ளி காவல் நிலையத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் தீன்மர் மல்லண்ணா புகார் அளித்துள்ளார்.