பிரபல நடிகர் ஜெயராமின் மகனும், நடிகருமான காளிதாஸ் ஜெயராமின் திருமணம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் நடைபெற்றது. நடிகர் காளிதாஸ் ஜெயராம் - தாரணி காளிங்கராயர் ஆகியோர் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் முன்னிலையில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.