சூர்யா-44 திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய நடிகை ஸ்ரேயா, சூர்யா-44 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதாக கூறினார்.