மும்பை... சாலையில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக கிடந்த பெண். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்த போலீஸ். ஒரு வாரமாக கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறல். செல்போன் எண் மூலம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள். பெண் கொலை செய்யப்பட்டது ஏன்? நடந்தது என்ன?டிசம்பர் 24ம் தேதி. நைட்டு நேரத்துல வாக்கிங் போன அமினாபி, ரொம்ப நேரமாகியும் வீடு திரும்பல. இதனால மனைவி அமினாபிக்கு, கணவர் முகமது இப்ரார் ஃபோன் பண்ணி பாத்துருக்காரு. அப்ப அமினாபி அந்த ஃபோன எடுக்கவே இல்ல. முகமது இப்ரார் தன்னோட மனைவிய தேடி பல இடங்கள்ல அலைஞ்சுருக்காரு. அப்ப மறுநாள் காலையில, PWD சாலையில கத்துக்குத்துக் காயங்களோட அமினாபி, ரத்த வெள்ளத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து கொலையாளிகள் யாருன்னு கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதுல எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதுக்கடுத்து கொலை நடந்த ஸ்பாட்டுல உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் கிட்டயும் போலீஸ் விசாரிச்சுருக்காங்க. அதுலையும் எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதுக்கடுத்து, அமினாபியோட செல்போன கைப்பற்றி போலீஸ் ஆய்வு பண்ணிருக்காங்க. அப்ப அன்சாரி-ங்குற நபர், அமினாபிக்கு அடிக்கடி போன் பண்ணிருந்தத கண்டுபிடிச்ச போலீஸ், அவர கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. மும்பை காட்கோபர் பகுதிய சேந்த அமினாபியும், ஆட்டோ ஓட்டுநரான அன்சாரியோட மனைவியும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். அமினாபியோட குடும்பம் ரொம்ப ஏழ்மை நிலையில இருந்துருக்கு. கொரோனா நேரத்துல பொருளாதார ரீதியா ரொம்ப கஷ்டத்துல இருந்த அமினாபி, அன்சாரியோட மனைவி கிட்ட குடும்பத் தேவைக்காக 3 லட்சம் ரூபாய் கடன் கேட்ருக்காங்க. தோழி பணம் கேட்ட உடனே, அன்சாரியோட மனைவியும் தனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கடன் வாங்கி அந்த பணத்த கொடுத்துருக்காங்க. ஆனா பணத்த வாங்குன அமினாபி, கிட்டத்தட்ட 5 வருஷமா அந்த பணத்த திருப்பி கொடுக்காம ஏமாத்திட்டு இருந்துருக்காங்க.பணத்த அப்ப தர்றேன், இப்ப தர்றேன்னு ஏமாத்திட்டு இருந்த அமினாபி, ஒரு கட்டத்துல என்னால 3 லட்சம் ரூபாய திருப்பி தர முடியாது, உன்னால என்ன ஒன்னும் செய்ய முடியாதுன்னு சண்டை போட்ருக்காங்க. அதுக்கு அன்சாரியும் அவங்க மனைவியும், நாங்களே இன்னொருத்தங்க கிட்ட இருந்து கடன வாங்கி பணத்த கொடுத்தோம், இப்ப நீங்க அந்த பணத்த கொடுக்கலனா, அவங்க எங்கமேல போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணிருவாங்க. அதே மாதிரி எங்க மகளுக்கு உடல் நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்கோம், இந்த நேரத்துல நீங்க பணம் கொடுத்து ஹெல்ப் பண்ணா கொஞ்சம் நல்லா இருக்கும்ன்னு கேட்ருக்காங்க. ஆனா அத காது கொடுத்துக் கூட கேட்காத அமினாபி, உங்க மகளுக்கு என்ன ஆனா, எனக்கு என்ன, இனிமேல் பணத்த கேட்டு நீங்க என்ன டார்ச்சர் பண்ணனா, ஆளவச்சு உன்ன போட்டுத் தள்ளிருவேன்னு மிரட்டிருக்காங்க. இதனால கடும் கோபமான அன்சாரி, அமினாபிய கொலை செய்ய திட்டம் போட்ருக்காரு. அமினாபி, எப்பல்லாம் வீட்ட வீட்டு வெளியில தனியா வர்றாங்க, எங்கெல்லாம் தனியா போறாங்கன்னு எல்லாத்தையும் நோட் பண்ணிட்டு இருந்துருக்காரு அன்சாரி. சம்பவத்தன்னைக்கு நைட்டு அமினாபி பக்கத்துல உள்ள PWD சாலையில வாக்கிங் போய்ட்டு இருந்துருக்காங்க. அப்ப அங்க வந்த அன்சாரி, அமினாபி கூட பிரச்னை பண்ணிருக்காரு. அடுத்து மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்த அன்சாரி, அமினாபி சரமாரியா குத்திருக்காரு. இதுல கை, கால், கழுத்துன்னு எல்லா இடங்களையும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டு அமினாபி சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாங்க. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அன்சாரிய அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.