“பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு நாங்கள் அதிமுகவோடு இணைந்துள்ளோம்...” அப்படின்னு சொல்லி 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணிய உறுதி செஞ்சிருக்காரு பாமக தலைவர் அன்புமணி. தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் பரபரக்கத் தொடங்கியிருக்கிற சூழல்ல, பாமக இதுவரை எத்தனை முறை அதிமுகவோடு கூட்டணி வைத்தது? எத்தனை முறை வெற்றி கண்டது அப்டிங்கிற வரலாற்ற ஒருமுறை திரும்பிப் பாக்கலாம்... சாதாரண அரசியல் கட்சிகள மாதிரி இல்லாம, வன்னியர் சமூக மக்கள், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையினர் வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, சட்டமன்றம் மட்டுமில்ல நாடாளுமன்றம் வரையிலும் போய்ட்டு வந்த History-அ கையில வச்சிருக்கு. இப்போ பாமகவோட தலைவரா இருக்கக் கூடிய அன்புமணி, ஒரு காலத்துல மத்திய அமைச்சராவும் இருந்திருக்காரு. கட்சி தொடங்கி 37 வருடங்கள் ஆனாலும் கடந்துவந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்ல பிரதான கட்சிகளோட எப்போல்லாம் பாமக கூட்டணியில இணையுறாங்களோ அப்போலாம் வெற்றிய உறுதி செஞ்சிட்டுதான் இருந்திருக்காங்க. ஆனா, வரக்கூடிய 2026 தேர்தலுக்கான கூட்டணிய உறுதி செய்தது உள்பட, இதுவரையிலும் பாமக அதிமுகவுடன் தான் அதிகமுறை கூட்டணியில இருந்திருக்கு. அந்த வகையில பாமக முதன்முறையா ஒரு பெரிய கட்சியோட கூட்டணி வைத்தது அப்டின்னு பாத்தோம்னா, அது அதிமுகதான். அது 1998ஆவது வருஷம். அப்போ நடந்த நாடாளுமன்ற தேர்தல்ல, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில அங்கம் வகித்த பாமக, பாஜகவையே முந்தி, அதிமுகவுக்கு அடுத்தபடியா, 4 சீட்கள கைப்பற்றுச்சு. ஆனா, இந்த 98 தேர்தல்தான் மிக குறுகிய காலத்திலேயே கலைக்கப்பட்ட மக்களவையா மாறிச்சு. ஏன்னா, அப்போ பாஜகவுக்கு ஆதரவு கொடுத்துட்டு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தங்களோட ஆதரவ விலக்கிக் கொண்டதுனால, பாஜக பெரும்பான்மைய நிரூபிக்க முடியாம போயி, மீண்டும் 1999-லேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டி இருந்தது. ஆனா, ஒரே வருஷத்துல, பா.ம.க. காய் நகர்த்தி, திமுக பக்கம் போகுது. ஆமா, 1999-ல திமுக, பாஜகவோட கூட்டணி வச்சது. “திமுக மீது தமிழக மக்கள் மிகுந்த ஆத்திரத்தில் இருக்கிறார்கள்”ன்னு இன்னைக்கு பாமக தலைவர் அன்புமணி சொல்லியிருந்தாலும் கூட, அப்போ அமைஞ்ச திமுக தலைமையிலான NDA கூட்டணியில முதல்முறையா இடம்பெறுது பாமக. ஆனா, இந்த முறை பாமக போட்டியிடுவதற்கான தொகுதிகள் 7ஆக அதிகரிக்கப்பட்டுச்சு. அதுல 5 தொகுதிகள்ல பாமக வெற்றியும் பெற்று அவங்களோட வாக்கு சதவீதமும் அதிகரிக்கிது. அதத் தொடர்ந்து 2001ல் நடந்த சட்டமன்ற தேர்தல்ல பாமக அதிமுகவோட கூட்டணி வச்சது. 27 சட்டமன்ற தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில, 20 தொகுதிகள்ல வெற்றிபெற்று நல்ல ஆதரவ பதிவு செஞ்சது பாமக. 2004-ல நடந்த மக்களவைத் தேர்தல்ல, மதச்சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில, அதாவது திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இருந்த கூட்டணியில இணைஞ்சு போட்டியிட்டப்போ தான், அன்புமணி வெற்றி பெற்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சரா பதவி வகிச்சாரு. அதைத் தொடர்ந்து 2006, 2011 சட்டமன்ற தேர்தல்கள்ல திமுகவோட கூட்டணி வச்ச பாமக, திமுக மற்றும் அதிமுகவோட ஆதரவு இல்லாம, தமிழகத்துல அப்போதைக்கு உருவாகியிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில இணைஞ்சு, 2014ஆம் ஆண்டு தேர்தல்ல போட்டியிட்டது. 8 தொகுதிகள்ல போட்டியிட்டாலும் அன்புமணி மட்டும்தான் அதுல வெற்றி பெற்றாரு. இதுல இருந்துதான் பாமகவோட வாக்கு சதவீதம் கொஞ்சம் சரிய ஆரம்பிச்சது. அதைத் தொடர்ந்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தல்ல தனித்து போட்டியிட்ட பாமக ஒரு இடத்துல கூட வெற்றி பெறல. அதைத் தொடர்ந்து 2019-ல நடந்த மக்களவைத் தேர்தல்ல, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில, பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுச்சு. ஆனா, அந்த தேர்தல்ல பாமக மட்டுமில்ல, கூட்டணியில இருந்த மற்ற அனைத்து கட்சிகளுமே ஒரு தொகுதியில கூட வெற்றி பெறாம தோல்விய தான் சந்திச்சாங்க. தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தல்ல, அதிமுகவோட கூட்டணி சேர்ந்த பாமக 23 தொகுதிகள்ல போட்டியிட்ட நிலையில, 5 தொகுதிகள்ல மட்டுமே வெற்றிய பதிவு செஞ்சது. அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டைப் போலவே திமுக, அதிமுக இல்லாம உருவாகியிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில இணைஞ்ச பாமக 2024 மக்களவைத் தேர்தல்லையும் போட்டியிட்டுச்சு. 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், இந்த தேர்தல்ல பாமகவுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கல. அதைத் தொடர்ந்துதான் இப்போ மீண்டும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில இணையிறதா அறிவிச்சிருக்காரு பாமக தலைவர் அன்புமணி. கட்சி தொடங்கி வெறும் 3 தேர்தல்களை சந்திச்சப்போவே சுமார் 6% வாக்குகளைப் பெற்று தமிழக மக்களோட கவனத்த ஈர்த்த பாமக, தனித்துப் போட்டியிட்டத விட, கூட்டணியிலதான் அதிக வெற்றிய பதிவு செஞ்சிருக்கு. ஆனா, திமுக, அதிமுக, பாஜக தவிர, பாமக முதல்ல கூட்டணி வச்சது என்னவோ திவாரி காங்கிரஸ் கட்சியோடதான். இதே மாதிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கும் கூட பாமக ஆதரவு தந்திருக்கு. ஒரு காலத்துல ஏறுமுகத்துல இருந்த பாமகவோட வாக்கு சதவீதம், கொஞ்சம் கொஞ்சமா சரிய ஆரம்பிச்சாலும், கட்சி நிறுவனரும், அதனுடைய தலைவரும் கட்சிய தாங்கிப் பிடிச்சிட்டுதான் இருந்தாங்க. ஆனா, இப்போ கட்சி இரண்டா பிளவுபட்டிருக்கக் கூடிய சூழல்ல, கடந்த சட்டமன்ற தேர்தல்ல ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்களுமே பிளவுபட்டுதான் போயிருக்காங்க. வரக்கூடிய தேர்தல்ல பாமகவுக்கு 17 அல்லது 18 தொகுதிகள் ஒதுக்கப்படலாம்னு பேச்சு அடிபடக் கூடிய நிலையில எத்தனை தொகுதிகள்ல வெற்றிய உறுதி செய்வாங்க அப்டிங்கிறத பொறுத்திருந்து தான் பாக்கணும்...இதையும் பாருங்கள் - அதிமுக, பாமக கூட்டணி