தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரா மட்டுமில்லாம, கார் பந்தயத்திலும் தனக்கென தனி அடையாளத்தை பதிச்சு, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் அஜித்குமார். ஒரு நடிகரா எந்தளவுக்கு பிசியா இருக்காரோ, அதே அளவுக்கு கார் பந்தயங்களிலும் செம பிசியா இருந்துட்டு வர்றாரு அஜித். அந்த வகையில, அஜித்குமார் இப்போ மலேசியாவுல நடைபெற இருக்கும் 24H Series International Car Race போட்டியில் பங்கேற்க இருக்காரு. இந்த நிலையில ரேசிங் சர்கியூட்டுல தனக்காக காத்திருந்த ரசிகர்களை பார்த்து ரொம்ப உற்சாகமா கையசைத்து Hi சொல்லிருக்காரு. இப்போ இந்த வீடியோ தான் இணையத்துல வைரலாகிட்டு இருக்கு.