திரைப்படத்தை தாண்டி, கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித்குமார், தற்போது அடுத்தடுத்த கார் பந்தயங்களில் பங்கு பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அஜித்குமார் பற்றிய ஒரு வீடியோ, சமூக வலை தளங்களில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. சமீபத்தில், அஜித்குமார் கோவை வந்தார். இந்தியாவின் முதல் F1 கார் ரேசர் நரேன் கார்த்திகேயன் மற்றும் J.A.Motorsports நிறுவனர் J.ஆனந்தை கோஸ்ட் ரேசிங் சர்கியூட்டில், அஜித் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி, J.A.Motorsports தயாரித்துள்ள ஒரு பிராண்ட் நியூ ரேஸ் காரையும் அஜித்குமார் ஓட்டிப் பார்த்து இருக்கிறார். இதனால், இது வெறும் எதார்த்தமான சந்திப்பு தானா? அல்லது இதுவரை Formula 3 மற்றும் Formula 2 பந்தயங்களில் மட்டுமே கலந்துகொண்ட அவர், இனிமேல் Formula 1 ரேசுக்கு தயார் ஆகிறாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தற்போது, இந்த காணொலி தான் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.