நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த மோதலின் போது, ராகுல்காந்தி கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக பா.ஜ.க. பெண் எம்.பி. ஃபாங்னோன் கோன்யாக் புகார் கூறியிருப்பது பெரும் புயலை கிளப்பியுள்ளது. மோதலின் போது ராகுல் காந்தி, தனக்கு மிக மிக அருகில் வந்து நின்றது அசௌகரியமாக இருந்தது என கூறிய அவர், ராகுல்காந்தியின் செயல் ஒரு பெண்ணாக தனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாக பகீர் கிளப்பியுள்ளார்.