நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அதலைக்காய் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதலக்காய் என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை . சித்த மருத்துவர்களுக்கும் ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் அதலைக்காய். இந்த அதலைக்காய் பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்த காயில் துத்தநாகம் வைட்டமின் சி பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அதலைக்காய் ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்து விடுபடலாம்.இதில் உள்ள சத்துக்கள் நமது வயிற்றுப் பிரச்சனையை தீர்ப்பதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. கிருமிகளை அழிப்பதோடு குடற்புழு பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இந்த காய் மற்ற காய்கறிகளைப் போல நீண்ட நாட்கள் வைத்து சமைக்க முடியாது. கார்த்திகை மற்றும் மார்கழி மாத பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால் இதை வற்றல் போட்டு வைத்து பயன்படுத்தலாம்.