இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வரும் 4ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 4ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் "தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்" யாத்திரை நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார். பின்னர் 5ஆம் தேதி திருச்சியில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் அவர், பின்னர், தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், OPS, TTV இணைப்பு, தேர்தல் வியூகம் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துகிறார்.