இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் ஒரு வாழை பழத்தை 100 ரூபாய்க்கு விற்க முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் தள்ளுவண்டியில் வாழைப் பழத்தை விற்பனை செய்து வரும் வியாபாரியிடம் வெளிநாட்டு சுற்றுலா பயணி விலை கேட்க, ஒரு பழம் 100 ரூபாய் என பதிலளிக்கிறார். விலை அதிகம் என்பதை உணர்ந்த சுற்றுலா பயணி மீண்டும் மீண்டும் பழத்தின் விலையை கேட்டு உறுதிப்படுத்தி கொள்கிறார்.