கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக இரு தினங்களுக்கு முன்பு சர்க்கார் பதி வனப்பகுதியில் இருந்து 75 அடி உயர கொடிமரம் கொண்டுவரப்பட்டது. தை அமாவாசை தினத்தில் உப்பாற்றில் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை அடைந்ததும் பக்தர்கள் முன்னிலையில் 75 அடி உயர கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி மயான பூஜையும், 14ஆம் தேதி குண்டம் இறங்கும் விழாவும் நடைபெறுகிறது.