ஆட்டோ ஸ்டாண்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் ஆட்டோ ஓட்டுநரின் சடலம். பெண்ணின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த உறவினர்கள். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கிடைத்த அதிர்ச்சி தகவல். பெண் ஆட்டோ ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அம்பலம். தப்பி ஓட முயற்சித்த பெண்ணின் கணவரை சுட்டுப் பிடித்த போலீஸ்? பெண் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டது ஏன்? பின்னணி என்ன?உத்தரப்பிரதேசத்துல உள்ள ஜான்சி பகுதிய சேந்த முகேஷூம், அதே பகுதிய சேந்த அனிதாவும் ரொம்ப நாட்களா காதலிச்சுட்டு இருந்தாங்க. இவங்களோட காதலுக்கு ரெண்டு பேரோட பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. ஆனா தங்களோட காதல்ல ரொம்ப தீர்க்கமா இருந்த ரெண்டு பேரும் வீட்ட விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாம அங்குள்ள ஒரு கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் இந்த தம்பதி நிம்மதியா தங்களோட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா, அடுத்த கொஞ்சம் நாட்கள்லையே இவங்களுக்குள்ள பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. தொட்டத்துக்கு எல்லாம் இந்த தம்பதிக்குள்ள சண்டையும் சச்சரவுமாவே இருந்துருக்கு. இதுக்கிடையில அனிதாவோட நடத்தையிலும் சந்தேகப்பட ஆரம்பிச்சுருக்காரு முகேஷ். மனைவிய போட்டு அடிக்கிறது, செல்போன கொடுக்காம சித்ரவதை பண்றதுமா இருந்துருக்காரு. இதனால நொந்துபோன அனிதா இனி இவனோட வாழ்ந்தா, நம்ம எதிர்காலமே கேள்விக்குறியாகிரும்ன்னு முடிவு பண்ணி, முகேஷ விட்டு பிரிஞ்சு தனியா வாழ ஆரம்பிச்சுருக்காங்க.அதுக்கடுத்து சொந்தமா ஒரு ஆட்டோவ வாங்குன அனிதா, நைட்டு நேரத்துல ரயில்வே ஸ்டேஷன் வரும் பயணிகளுக்காக சவாரி ஓட்டி சம்பாதிச்சுட்டு இருந்தாங்க. இதுக்கிடையில அனிதா தன்னை விட்டு பிரிஞ்சு போனதால அவங்க மேல முகேஷ் கொலை வெறியில இருந்துருக்காரு. அவங்க வேற ஒரு ஆண் கூட பழகிட்டு இருக்குறதா, நினைச்ச முகேஷ், அவங்கள பழி வாங்கவும் திட்டம் போட்ருக்காரு. அதுக்காக தன்னோட நண்பர்கள் ரெண்டு பேர் கிட்ட நடந்த எல்லா விஷயத்தையும் சொல்லி கொலைக்கான ஸ்கெட்ச்சையும் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு அனிதா சவாரிக்காக, ரயில்வே ஸ்டேஷன்-க்கு வெளியில நின்னுட்டு இருந்தாங்க. அப்ப சம்பவ இடத்துக்கு வந்த முகேஷும் அவரோட நண்பர்களும், அனிதாகிட்ட பயங்கரமா வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அடுத்து மறைச்சு வச்சுருந்த துப்பாக்கிய எடுத்த முகேஷ், அவங்கள சரமாரியா சுட்டுக் கொன்னுட்டு அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாரு. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், கொலையாளி முகேஷ தேடிருக்காங்க. முகேஷ் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில பதுங்கியிருந்தத தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அவர சுத்தி வளைச்சுருக்காங்க. போலீச பாத்ததும் முகேஷ், தப்பிச்சு ஓட பாத்துருக்காரு. ஆனா அவர துப்பாக்கியால காலுலையே சுட்டுப் பிடிச்ச போலீஸ், அவர அரெஸ்ட் பண்ண சிறையில அடைச்சுட்டாங்க. இதையும் பாருங்கள் - சமத்துவ பொங்கலை எதிர்க்கும் வானதி