சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், சிங்காநல்லூர் உட்பட 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை, நயினார் நாகேந்திரன் நியமித்த நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்து இருப்பது, கமலாலய வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி, பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கூறினாலும் பின்னணியில் இருக்கும் புகைச்சலை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கமலாலய வட்டாரத்தில்...மாநில தலைவர் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து, பாராமுகத்திலேயே இருந்து வந்த அண்ணாமலை எடுத்த புதிய முடிவு தான் கமலாலய வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமையில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைத்து கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு தயாராகும் வகையில், பாஜகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து இருந்தார் நயினார் நாகேந்திரன்.நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பட்டியலில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளை கண்காணிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. தலைமை கேட்டுக் கொண்டால்...இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தொகுதிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியதோடு, அடுத்தடுத்து தலைமை கேட்டுக் கொண்டால் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் எனவும் அண்ணாமலை கூறினார். அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமேதந்தையின் உடல்நிலையை காரணமாக அண்ணாமலை குறிப்பிட்டாலும், பின்னணியில் வேறு சில காரணங்களும் இருக்கிறது என, கமலாலயத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு, அதற்கு பிறகு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட அண்ணாமலைக்கு, தேசிய பொறுப்பு வழங்கப்படும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், கடைசி வரைக்கும் எந்த அறிவிப்பும் வராமல் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் மேலும் அதிருப்திஇதற்கு மத்தியில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததிலும் அண்ணாமலைக்கு விருப்பம் இல்லை என சொல்லப்பட்டு வந்தது. போக போக பாஜகவில் அண்ணாமலைக்கான முக்கியத்துவமும் குறைந்து கொண்டே வந்தது. இந்த சூழலில் தான் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்தும் விலகியிருக்கிறார். மாநிலத்தின் தலைவர் பதவியில் இருந்த தனக்கு வெறும் 6 தொகுதிகளை கவனிக்க பொறுப்பாளராக நியமிப்பதா? என்று, அண்ணாமலை அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலை வந்த பிறகு பாஜகவின் செயல்பாடுகள் வேகமெடுத்து வந்த நிலையில், அண்ணாமலைக்கு இன்னும் பொறுப்பு வழங்கப்படாமல் இருப்பது மேலும் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மூத்த நிர்வாகிகளும் அதிருப்திஇது ஒரு பக்கம் இருக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட செய்யாமல் தன்னிச்சையாக நயினார் நாகேந்திரன் பொறுப்பாளர்களை நியமனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அண்ணாமலைக்கு, தென் மாவட்டங்களிலேயே 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை தரப்பு வலுவாக இருக்கும் கோவையில் ஒரே ஒரு தொகுதியாக சிங்காநல்லூர் மட்டும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரனின் தன்னிச்சை நியமனம் அண்ணாமலையை தாண்டி இன்னும் சில மூத்த நிர்வாகிகளும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இனிமேல் டெல்லி கைகளில்...பதவி பறிக்கப்பட்ட வருத்தம், நயினார் நாகேந்திரனுடன் பூசல் என அதிருப்தியில் இருந்த அண்ணாமலையை அரவணைக்க தற்போதைய சூழலில் டெல்லி மேலிடமும் தயாராக இல்லாத நிலையில் தான், தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்ணாமலையை சரி கட்டுவதும், ஓரம் கட்டுவதும் இனிமேல் டெல்லி கைகளில் தான் இருக்கிறது. இதனிடையே, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் 72 பேரை பொறுப்பாளராக அறிவித்த பட்டியலை பாஜக வாபஸ் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. Related Link இன்றைய ராசி பலன்கள் 04022026