கேரளாவை உலுக்கிய ஆறு பேர் கொலை. வீட்டிற்குள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆறு சடலங்கள். தாய், தங்கை, மனைவி, இரு பிள்ளைகள் என ஆறு பேரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரன். Second Show படத்திற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியவர்களுக்கு நடந்த அதிபயங்கரம். காவல்துறையினரை திசை திருப்புவதற்காக சுவற்றில் வரையப்பட்டிருந்த அம்புக்குறி. உயிருக்கு உயிராக பழகிய நண்பனே, எமனாக மாறியது ஏன்? காவல்துறையினர் கொலையாளியை கண்டுபிடித்தது எப்படி? நடந்தது என்ன?ஜனவரி 7 - 2001, கேரள மாநிலம் ஆலுவா-ங்குற இடத்துலதான் அகஸ்டியன் - பேபிங்குற தம்பதி அவங்க குடும்பத்தோட வாழ்ந்துட்டு இருந்தாங்க. இவங்களுக்கு 14 வயசுல திவ்யா-ங்குற மகளும், 9 வயசுல ஜெய்மோன் -ங்குற மகனும் இருந்தாங்க. அகஸ்டியன்கூட அவரோட அம்மா க்ளாராவும், தங்கையான கொச்சிராணியும் வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. நல்ல வசதி வாய்ப்போட இருந்த, அகஸ்டியனும் அவங்க குடும்பத்துல உள்ளவங்களும் ரொம்பவே கடவுள் பக்தி கொண்டவங்களாம். அதனால, ஞாயிற்று கிழமைகள்ல தவறாம, குடும்பத்தோட சர்ச்சுக்கு போய் ப்ரே பண்றத வழக்கமா வச்சிருந்துருக்காங்க.ஆனா, அந்த ஞாயிற்று கிழமை, அகஸ்டியனும் அவங்க குடும்பத்துல இருக்குறவங்க யாருமே சர்ச்சுக்கு வரல. இந்த விஷயத்த நோட் பண்ண அகஸ்டியனோட மச்சானான அதாவது பேபியோட தம்பி ராஜன்- ங்குறவரு, என்னாச்சுன்னு தெரியலேயே, எதுக்கு அக்காவும், மாமாவும் இன்னும் சர்ச்சுக்கு வரலன்னு சொல்லி, மாமா அகஸ்டியனுக்கு ஃபோன் பண்ணிருக்காரு. ஆனா, அவரு போனை எடுக்கல. அதனால, அக்கா பேபிக்கு ஃபோன் பண்ணிருக்காரு. அவங்களும் ஃபோன அட்டன் பண்ணல. பலமுறை ஃபோன் பண்ணியும் ரெண்டு பேரும் எடுக்காததால, ராஜன் நேரா வீட்டுக்கே போயிருக்காரு.காலிங் பெல்ல அடிச்சப்பதான், அகஸ்டியன் வீட்டுக்கதவு திறந்து இருக்குறத நோட் பண்ணிருக்காரு ராஜன். என்னடா வீட்டு கதவ இப்படி திறந்து வச்சிருக்காங்களேன்னு நினைச்சு, கதவ நகர்த்திட்டு வீட்டுக்குள்ள போயிருக்காரு. அப்படி உள்ள போன ராஜனுக்கு நினைச்சுக்கூட பாக்க முடியாதளவுக்கு பேரதிச்சி காத்திருந்துருக்கு. அகஸ்டியனோட வீடு முழுக்க ரத்தமாவும், வீட்டுல இருந்த ஆறு பேரும் அங்க அங்க ரொம்ப கொடூரமான முறையிலயும் உயிரிழந்து கிடந்துருக்காங்க. ஒருத்தரு கதவு பக்கத்துலையும், இன்னொருத்தங்க பெட்ரூம்லையும்னு இப்படி வார்த்தையால விவரிக்க முடியாதளவுக்கு ஆறு பேரும் ரத்த வெள்ளத்துல கிடந்துருக்காங்க. இது எல்லாத்தையும் பாத்த பயத்துல உடனே போலீஸுக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லிருக்காரு ராஜன். அடுத்த, கொஞ்ச நேரத்துலேயே ஸ்பாட்டுக்கு வந்த காவலர்கள், அங்க அங்க இறந்து கிடந்த சடலங்கள பார்த்து ஒரு நிமிஷம் ஷாக்காகிருக்காங்க. அடுத்து, ஆறு பேரோட சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு, ஒரே குடும்பத்த சேர்ந்தவங்கள யாரு இந்தளவுக்கு கொலை பண்ணிருப்பா? அதுவும் வீட்டுல இருந்த சின்ன பையனையும் கொடூரமான முறையில கொன்னது யாருன்னு கண்டுபிடிக்க புலன் விசாரணையில இறங்குனாங்க. முதற்கட்டமா, போலீஸுக்கு தகவல் கொடுத்த ராஜான்கிட்ட விசாரிச்சப்ப, அவரு நடந்தத பத்தி சொல்லிருக்காரு. மாமாவும், அக்காவும் சர்ச்சுக்கு வரல. ஃபோன் பண்ணாலும் எடுக்கல. அதனால, என்ன ஏதுன்னு வீட்டுக்கு போய் பாத்தப்ப, இப்படி இறந்து கிடந்துருக்காங்க, இத தவற எனக்கு வேற எதுவும் தெரியாதுன்னு சொல்லிருக்காரு. அதுக்கப்புறம், போலீஸ்காரங்க அந்த வீட்டுக்குள்ள போய் ஏதாவது எவிடெஸ்ன் கிடைக்குமான்னு தேடி பாத்துருக்காங்க. அந்த சமயத்துல, அங்க உள்ள சுவற்றுல ரத்ததால் ஒரு அம்புக்குறி போட்டுருந்தத கவனிச்சிருக்காங்க. இந்த அம்புகுறி எத நோக்கி போடப்பட்டுருக்குன்னு ஆராஞ்சப்ப, அதுலயும் எந்த க்ளூவும் கிடைக்கல. அந்த நேரத்துலதான், ராஜன் காலிங் பெல் அடிக்கிறப்ப, வீட்டு கதவு திறந்துருந்ததுன்னு சொன்ன விஷயம் போலீஸுக்கு நியாபகம் வந்துருக்கு. உடனே போலீஸ் ஆஃபிசர்ஸ் அந்த வீட்டு கதவுக்கு முன்னாடி போய் நின்னு பாத்துருக்காங்க. அப்ப கதவு உடைக்கப்பட்டதுக்கான எந்த தடயமும் இல்லாததால, வீட்டுக்குள்ள வந்து கொலை பண்ணது, அகஸ்டியனுக்கு தெரிஞ்ச யாரோவாவது தான் இருக்கனும்னு சந்தேகப்பட்டுருக்காங்க போலீஸ். அதனால, அவரோட சொந்தக்காரங்க, நெருங்கிய நண்பர்கள், அக்கம்பக்கத்துல உள்ளவங்கன்னு எல்லாரையும் விசாரணை வளையத்துக்குள்ள கொண்டு வந்தாங்க.ஆனா, அதுலயும் எந்த துப்பும் கிடைக்கல. அப்பதான், அங்க இருந்த ஒருத்தரு ஏன் நீங்க இன்னும் ஆண்டனிக்கிட்ட விசாரிக்கலன்னு கேட்டுருக்கங்க. அதுக்கு போலீஸ் ஆஃபிசர்ஸ் யார் அந்த ஆண்டனின்னு கேட்டுருக்காங்க. அகஸ்டியன்கூட க்ளோஸா இருந்த ஆண்டனி, அவங்க இறந்துப்போன விஷயம் தெரிஞ்சு, ஏன் இன்னும் வந்து பாக்கல-ங்குற சந்தேகம் போலீஸூக்கு எழுந்துருக்கு. அதுக்குப்பிறகு, ஆண்டனிய பத்தி விசாரிக்க ஆரம்பிச்சப்ப, அவரு அலுவால உள்ள தனியார் கம்பெனில டிரைவரா வேலை பாத்துட்டு இருந்தது, அவருக்கு கல்யாணமாகி ரெண்டு பிள்ளைகள் உள்ள விஷயமும் தெரியவந்துச்சு. ஆண்டனியோட குடும்பம் ரொம்பவே வறுமையான குடும்பமாம். அவரு வேலைக்கு போனாதான் அன்னைக்கு சாப்பாடு-ங்குற நிலமையில இருந்துருக்காரு. எல்லா விஷயத்தையும் கலெக்ட் பண்ண போலீஸ்காரங்க, ஆண்டனி இப்போ எங்க இருக்காருன்னு விசாரிச்சப்பதான், அவரு ஜனவரி 8-ந் தேதி காலையில இந்தியாவ விட்டு சவுதி அரேபியாவுக்கு போன விஷயம் தெரியவந்துச்சு. உடனே, ஆண்டனியோட குடும்பத்துல உள்ளவங்ககிட்ட எதுக்காக ஆண்டனி இந்தியாவவிட்டு போனாருன்னு கேட்டதுக்கு, எங்களுக்கு எதுவும் தெரியாது சார், அவசர அவசரமா வீட்டுக்கு வந்தாரு, திடீர்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்பி போயிட்டாருன்னு சொல்லிருக்காங்க. இது எல்லாத்தையும் வச்சு பாத்ததுல, ஆண்டனிக்கும் இந்த குடும்பத்தோட கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு-ங்குற சந்தேகம் வந்துச்சு. அதனால, ஆண்டனியோட மனைவிய வச்சு, அவர இந்தியாவுக்கு வரவச்ச போலீஸ், அவர சுத்தி வளைச்சு பிடிச்சிருக்காங்க. அதுக்குபிறகு, ஆண்டனிய காவல்நிலையத்துக்கு கூப்பிட்டு வந்த போலீஸ், கிடுக்குப்பிடி விசாரணை பண்ணாங்க. போலீஸோட விசாரணைய பாத்து பயந்த ஆண்டனி, ஜனவரி 7-ந் தேதி நைட்டு என்ன நடந்துச்சு அப்டிங்குறத ஒன்னுவிடாம சொல்லிருக்காரு. அகஸ்டியன் தன்னோட மனைவி பேபியையும், பசங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுக்கிட்டு 2nd show படத்துக்கு கிளம்பிட்டு இருந்தாரு. அந்த நேரம், ஆண்டனி வீட்டுக்கு வந்துருக்காரு. அப்ப, எல்லாரும் எங்க போறீங்கன்னு ஆண்டனி கேக்க, நாங்க படத்துக்கு போறோம்னு சொல்லிட்டு நாலு பேரும் வீட்டுல இருந்து கிளம்பிட்டாங்க. வீட்டுல அகஸ்டியனோட அம்மா க்ளாராவும், தங்கை கொச்சிராணியும் மட்டும்தான் இருந்துருக்காங்க. ஆண்டனி, க்ளாராகிட்ட நல்லா பேசுவாராம். அதனால, ஆண்டனி தான் வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க போறதாவும், அதுக்கு கொஞ்ச பணம் தேவைப்படுது ஹெல்ப் பண்ணுங்கன்னு கேட்டுருக்காரு.அதுக்கு, க்ளாரா எங்ககிட்ட பணம்லாம் இல்லன்னு சொல்ல, அவங்க கழுத்துல போட்டுருந்த நகைகள் ஆண்டனி கண்ண உறுத்திருக்குது. பணம் கேட்டா இல்லன்னு சொல்லிட்டாங்கன்னு ஆத்திரமடைஞ்ச ஆண்டனி, க்ளாராவோட கழுத்தையும், கொச்சிராணியோட கழுத்தையும் அறுத்து கொலை பண்ணிருக்கான். அதுக்குப்பிறகு, அவங்க ரெண்டு பேர் போட்டுருந்த நகைகள கழட்டிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆக பாத்திருக்கான். கடைசியா, நம்ம வீட்டுக்கு வந்தத அகஸ்டியனும் வீட்டுல உள்ளவங்க எல்லாரும் பாத்தாங்க. அவங்க படத்துக்கு போயிட்டு வீடு திரும்போது க்ளாராவும், கொச்சிரானியும் இறந்து கிடக்குறத பாத்தா நம்ம போலீஸ்கிட்ட மாட்டிப்போமே-ங்குற பயம் ஆண்டனிக்கு வந்துருக்கு. அதனால, அகஸ்டியனும் அவரோட குடும்பமும் திரும்பி வரவரைக்கும் வீட்டுல மறைஞ்சிருந்த ஆண்டனி அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் ஒவ்வொருத்தரையும் கொடூரமான முறையில கொன்னுருக்கான்.அதோட போலீஸ்காரங்கள திசை திருப்புறதுக்காக ரத்தத்தால சுவற்றுல அந்த அம்புகுறியையும் வரைஞ்சிட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான். போலீசார் விசாரணையில ஆண்டனி ஒன்னுவிடாம எல்லாத்தையும் வாக்குமூலத்துல சொன்னத வச்சு, அவன் மேல கொலை வழக்குபதிவு பண்ண போலீஸ்காரங்க அவன அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. அதுக்கப்புறம், ஆண்டனிதான் கொலையாளி-ங்குறத ஆதாரங்கள் மூலமா நிரூபிக்கப்பட்டதால அவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுச்சு. அடுத்து, தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில, அவருக்கு சமீபத்துல பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுருக்கு.