சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் சாஹலின் சாதனையை அர்ஷ்தீப் சிங் முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், பில் சால்ட், பென் டக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங், தாம் விளையாடிய 61 சர்வதேச டி20 போட்டிகள் மூலம் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.