சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீ மணிகண்ட ஐயப்ப யாத்திரை குழு சார்பில் இரண்டாம் ஆண்டு ஐயப்பன் ஸ்ரீ ஆத்ம பிரியனுக்கு அஷ்டபிஷேகம் பூஜை நடைபெற்றது. இதில் சபரிமலையில் உள்ள ஐயப்பனை போன்று சிலை வைத்து நெய், பால் ,சந்தனம், விபூதி, சொர்ணம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.