அட்டாரி - வாகா எல்லையில் பாரம்பரிய முறைப்படி கொடி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லைப்பகுதி, பாகிஸ்தானின் வாகா எல்லை அருகே அமைந்துள்ளது. இங்கு சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கொடியிறக்க நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறும்.