கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மது கடையில் மதுபாட்டில்களை சட்டைக்குள் மறைத்து திருட முயன்ற நபர், உரிமையாளரிடம் கையும் களவுமாக சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாத்தனூர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்ற நபர், மதுபானங்களை பார்ப்பது போல் நடித்து, திடீரென பாட்டிலை சட்டைக்குள் மறைத்தார். இதை கண்ட உரிமையாளர் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.