கேரளாவை தொடர்ந்து, ராஜஸ்தானிலும் எஸ்.ஐ.ஆர். பணிச்சுமை காரணமாக அரசு ஊழியர் தற்கொலை கொண்டார். தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஆசிரியர்கள் உள்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பணிச்சுமை காரணமாக, எஸ்ஐஆர் தொடர்பான பணிகளை புறக்கணிக்க உள்ளதாக, தமிழக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் முகேஷ் ஜாங்கிட் என்பவர் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதாக கடிதம் எழுதிவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதையும் பாருங்கள் - "என் சாவுக்கு உயர் அதிகாரிகள் தான் காரணம்" கடிதம் எழுதி விபரீதம் | Transport Officer