சபரிமலையில், இன்று மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகல் 2.45 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மகர சங்கராந்தி பூஜைகளும் பிறகு, பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரண பெட்டி சன்னிதானத்தை வந்தடைந்ததும், சுவாமி ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டது. தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து, பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. மகரஜோதி தரிசனத்திற்காக, நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருவதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், பக்தர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சபரிமலையில் மகர விளக்கு தரிசனத்தை காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார். எருமேலி பாதை வழியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையை அடைந்து வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதையும் பாருங்கள் - மகள் மேல் இப்படி ஒரு பாசமா?