இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு வரும் 22ம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். பி.வி. சிந்து, ஐதராபாத்தை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.