சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, பாமக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு, தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில அளவிலான இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்று வழக்கறிஞர் பாலு, மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்ற முடிவில் திமுக உறுதியாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.