வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு ditwah என்று பெயர் சூட்டப்படும்.ஏமன் நாடு பரிந்துரைத்த பெயரை புயலுக்கு பெயரிட உள்ளதாக வானிலை மையம் தகவல்.வங்கக்கடலில் உருவாக உள்ள புயல் 29ஆம் தேதி வாக்கில் வட தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்பு.புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணிப்பு.தெற்கு இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்பு என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.