புஜாராவை போன்று அனுபவ வீரரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் தேர்வு செய்யாததே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக்கூடிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவைப்படுவர் என தெரிவித்த உத்தப்பா, புஜாரா போன்ற வீரரை அணியில் தேர்வு செய்யாதது இந்திய அணி செய்த தவறு என்றார்.