இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்றும் கூறி உள்ளார். பிரதமர் மோடி அறிவிப்பு இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்காக அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு மிக முக்கியமான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. மக்கள் இந்த ஒப்பந்தத்தை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று விவாதித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் 140 கோடி இந்தியர்களுக்கும் கோடிக்கணக்கான ஐரோப்பியர்களுக்கும் நிறைய வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இது உலகின் இரண்டு பொருளாதாரங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஒப்பந்தம் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% மற்றும் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்துடனான ஒப்பந்தங்களுக்குத் துணையாக அமையும்.இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். Related Link இந்தியா - EU வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து