ருவாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் "Bleeding Eye" வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 17 ஆப்பரிக்க நாடுகளில் இந்நோய் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 15 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை வலிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, குமட்டல், மூக்கு, கண்களிலிருந்து ரத்தம் வருதல் ஆகியவை நோயின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.