கத்தார் அரசு பரிசாக வழங்கிய போயிங் சொகுசு விமானத்தை ஏற்காவிட்டால், அதை விட முட்டாள் தனமான முடிவு வேறெதுவும் இருக்காது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், கத்தார் அரசு போயிங் 747 சொகுசு விமானத்தை தனிப்பட்ட முறையில் தனக்கு பரிசளிக்கவில்லை எனவும், மாறாக அமெரிக்க விமானப்படை அல்லது பாதுகாப்பு துறைக்கு பரிசாக வழங்கியிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.