குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழகத்தின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசுக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநரை கண்டித்து, தேநீர் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.