மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் அச்சத்தை போக்க, அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள திட்ட அறிக்கையை ஆய்வு செய்வதற்கு தடை விதிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இது, தமிழகத்திற்கு பின்னடைவு என்பதால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய வேண்டும் என்ற அன்புமணி, அதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுன் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.