ஜூனியர் ஆசிய உலகக்கோப்பையில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி பல இமாலய சிக்சர்களை பறக்க விட்ட நிலையில், 13 வயது சிறுவனால் இவ்வளவு தூரம் சிக்ஸ் அடிக்க முடியுமா? என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜுனைத் கான் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள வைபவின் தந்தை, சூர்யவன்ஷிக்கு எட்டரை வயது இருக்கும்போது பிசிசிஐ-யில் எலும்பு சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் வைபவின் வயதை உறுதிப்படுத்தும் விதமாக மீண்டும் சோதனைக்கு உட்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணி வைபவை வாங்கியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதுடைய வீரர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தது குறிப்பிடதக்கது