விராட் போன்று பந்தை பிடிக்க முயன்ற கேப்டன் ரோஹித் சர்மாவின் வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வரும் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை நகைச்சுவையுடன் பகிர்ந்து வருகின்றனர். வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஸ்டம்புகளில் உள்ள பெயில்களை மாற்றி வைத்த வீடியோவையும் பகிர்ந்து வரும் ரசிகர்கள், ரோஹித் விராட் கோலியை பின்பற்றுவதாக கூறி வருகின்றனர்.விராட் கோலி போட்டிகளின் போது பெயில்களை மாற்றுவதில் பிரபலமானவர் என்பது குறிப்பிடதக்கது.