வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவ வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 50-ற்கும் மேற்பட்ட பனை மரங்கள் மற்றும் அந்த இடத்திற்கு சொந்தமான மாட்டுகொட்டை ,இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகள் யாராவது தீ வைத்தார்களா? என்பது குறித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.