கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் வள்ளிக்குந்தம் பகுதியில் வீட்டிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த பெண்ணை தெருநாய் சரமாரியாக கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே பகுதியை சேர்ந்த 4 பேரை நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது.