தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த சிறுமியை தெரு நாய்கள் கடித்து குதறிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தின் ராஜேந்திரநகர் பகுதியில் உள்ள கோல்டன் ஹைட்ஸ் காலனியில் 6 வயது சிறுமி வீட்டின் முன்பு சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டு நாய்கள் சிறுமியை கடித்து குதறியது. தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுமியின் தாய் நாய்களை விரட்டினார். இதனையடுத்து கால், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.