இந்தியாவின் பாதுகாப்புத் தயார்நிலையை மேம்படுத்தும் வகையில், 21 ஆயிரத்து 772 கோடி ரூபாய் மதிப்பில் ராணுவ உபகரணங்களை கொள்முதல் செய்யக்கூடிய 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கடலோரப் பாதுகாப்பிற்காக விமானம் தாங்கிகள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை செயல்படுத்தும் திறன் கொண்ட 120 ஃபாஸ்ட் இன்டர்செப்டர் கிராஃப்ட் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.